Wednesday, September 24, 2014
பூக்களைக் கொடுத்து எண்ணத்தை வெளிப்படுத்தும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் பாரசீகர்கள். 18–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவீடன் நாட்டு அரசரான பனிரெண்டாம் சார்லஸ் (1682– 1718) அவருடைய இளம் வயதில் நாடு கடத்தப்பட்டு துருக்கியில் வசித்தார். அவர் பூங்கொத்து கொடுக்கும் வழக்கத்தை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.
பாரசீகத்தில் ஒவ்வொரு மலருக்கும் ஓர் அர்த்தமுண்டு. இந்தக் கருத்தை ஐரோப்பியர்கள் வரவேற்றனர். அதனால், சில நேரங்களில் முழு பேச்சுவார்த்தையையும் விதவிதமான மலர்களை மாற்றிக்கொள்வதன் மூலமே நடத்தினர். மலர் களின் மொழியில், காதலையும் நேசத்தையும் ரோஜா மலர் வெளிப்படுத்துகிறது. அதனால் 1 டஜன் ரோஜா மலர்களைக் கொடுப்பது, அன்பை உரக்கச் சொல்வது போல ஆகும்.
‘வேலன்டைன் டே’ எனப்படும் காதலர் தினத்தில் ரோஜா மலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் அன்றைய தினத்துக்கான மலராக வயலட் இருந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. காரணம், காதலர் தினத்தின் காரணகர்த்தாவான செயின்ட் வேலன்டைன் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன் தங்கியிருந்த சிறை அறைக்கு வெளியே வயலெட் மலர்கள் பூத்துக் குலுங்கின. அவர், கடிதம் எழுதுவதற்கான மையைக் கூட வயலெட் மலர் களைப் பிழிந்து தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
பூக்களின் வண்ணங்களும் அர்த்தங்களும்
காலம்காலமாக அன்பின் அடையாளமாகவும், மரியாதை நிமித்தமாகவும் கொடுக்கப்படும் மலர்கள், அவற்றின் வண்ணத்துக்கு ஏற்ப ஒவ்வொரு அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.
உதாரணமாக சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும், இளஞ்சிவப்பு மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டையும் வெளிப்படுத்துகின்றன. அதோடு, நேசத்துக்கான விண்ணப்பமாகவும் இளஞ்சிவப்பு மலர்கள் கருதப்படுகின்றன.
வெண்மை நிறப் பூக்கள் கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம், மவுனம் ஆகியவற்றையும், ‘பீச்’ அல்லது பவள வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. கருஞ்சிவப்பு வண்ணப் பூக்கள் நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன.
பூக்கள் சொல்லும் செய்திகள்
விதவிதமான பூக்கள், அவற்றைப் பெறுபவர்களுக்கு மட்டுமேயான பிரத்தியேக செய்தியையும் வெளிப்படுத்துகின்றன. மேலைநாட்டு வழக்கப்படி ரோஜா மலர்கள், ‘நான் உன்னை விரும்பு கிறேன் என்பதைத் தெரிந்துகொள்’ என்றும், கார்னேஷன் மலர்கள், ‘நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும், டபோடில் மலர்கள், ‘நீ நல்லவன் என்பதோடு தைரியசாலி’ என்றும், சாமந்தி, ‘நான் உனக்கு உண்மையாக இருப்பேன்’ என்பதையும், கிளாடியோலி, ‘உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்’ என்பதையும், ஐரிஸ் மலர்கள், ‘என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்’ என்றும், ஆர்க்கிட் மலர்கள், ‘நீ என் இதயத்தில் இருக்கிறாய்’ என்றும், ஸ்னேப் டிராகன்ஸ் பூக்கள், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்றும், சூரியகாந்திப் பூக்கள், ‘என் எண்ணங்கள் தூய்மையானவை’ என்றும், டூலிப் மலர்கள் ‘நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன்’ என்றும் சொல்கின்றன.
பொதுவாக பூக்கள் என்றாலே புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, உற்சாகம்தான். அதனால்தான் எல்லா நாடுகளிலும், எல்லா கலாசாரங்களிலும் முக்கிய நிகழ்வுகளில், மங்கள வைபவங்களில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. மனிதர்களை, குறிப்பாக பெண்களை பெரிதும் கவர்ந்திருக்கிற பூக்கள் இல்லாத உலகை கற்பனை செய்வது கூட கடினம்தான்!
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
0 comments:
Post a Comment