Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
கூடங்குளம் முதலாவது அணு உலையில் வணிகரீதியான மின் உற்பத்திக்கான அணுப்பிளவு தொடர்வினை புதன்கிழமை தொடங்கியது.
கூடங்குளத்தில், 1,000 மெகா வாட் மின்உற்பத்தி திறனுள்ள முதலாவது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் வணிகரீதியான மின் உற்பத்திக்கான ஆய்வு பணி கள் கடந்த ஜூலை 16-ம் தேதி தொடங்கியது. இதனால், மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்க அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரிய ஒப்புதலுடன், 35 நாட்கள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகள் வெற்றிகரமாக முடிக்கப் பட்டு, வணிகரீதியில் மின்உற்பத் திக்கு முதலாவது அணுஉலை தயார் நிலையில் இருந்தது. ஆய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கை அணுசக்தி ஒழுங்க மைப்பு வாரியத்திடம் அளிக்கப் பட்டிருந்தது. கடந்த 31-ம் தேதி வணிகரீதியில் மின்உற்பத்திக்கு வாரியம் அனுமதி அளித்தது.
புதன்கிழமை அதிகாலை 5.35 மணியளவில் முதலாவது அணு உலையில், ‘கிரிட்டிக்காலிட்டி’ எனப்படும் அணுப்பிளவு தொடர் வினை தொடங்கியது. அதில் இருந்து 12 மணி நேரத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி எட்டப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments: