Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திருப்பூர், செப்.13–
திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோடு கே.என்.பி. காலனியை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 21). எலெக்ட்ரீசியன். இவருக்கும் நஜீரா பானு (21) என்பவருக்கும் கடந்த 17.11.2013–ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நஜீரா பானுவின் பெற்றோர் 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் கொடுத்தனர்.
திருமணமான 15 நாட்களில் முகமது இலியாசும், அவரது தாயார் செரின் பேகமும் சேர்ந்து கொண்டு நஜீரா பானுவிடம் வரதட்சணையாக 4 பவுன் தங்க நகைகளும், ரூ.2 லட்சம் ரொக்க பணமும் வாங்கி வரும்படி கூறி கொடுமைப்படுத்தினர்.
இந்த கொடுமை தாங்க முடியாமல் நஜீரா பானு வீட்டில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து நஜீரா பானு நேராக தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார். உடல்நலம் தேறியவுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். 
அங்கு முகமது இலியாஸ் தனது தாயார் செரின் பேகத்துடன் சேர்ந்து கொண்டு மீண்டும் நஜீரா பானுவை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். சிகரெட்டால் நஜீரா பானுவின் தொடையில் சூடு வைத்தும், ஆக்ஷா பிளேடை தீயில் வைத்து சூடுபடுத்தி அவரது உடம்பில் காயங்கள் ஏற்படுத்தியும் கொடுமைப்படுத்தி வந்தனர்.
நாளுக்கு நாள் இருவரது கொடுமையும் தீவிரமானதால் பொறுத்துக் கொள்ள முடியாத நஜீரா பானு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்துரினிஷா வழக்குப்பதிவு செய்து முகமது இலியாஸ் மற்றும் செரின் பேகத்தை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

0 comments: