Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்டட அண்ணா தி.மு.க.மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் எம்.சி.தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் கலைமகள் எம்.கோபால்சாமி எம்.சி.வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை இன்று பட்டி தொட்டி எங்கும் அண்ணா தி.மு.க.கொண்டாடி வருகிறது.அவரது கொள்கைகளையும், கனவுகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் உரிமை அண்ணா தி.மு.க.இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற இடைதேர்தலில் தேர்தலில் தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திய அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ள்ளனர். தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என அவர் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களையும் எதிர் அணியினர் டெபாசிட் இழக்கும் அளவில் அமோக வெற்றியை தந்துள்ளனர். மூன்றாவது முறையாக முதல்வர் ஆனபிறகு தமிழக மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றியுள்ளார்.அவரது ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும்  வகையில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.இதுபோன்று வருகின்ற 2016 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234. தொகுதிகளிலும் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்
மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான  அ.விசாலாட்சி பேசியதாவது:​-
அண்ணாவின் தத்துவங்கள், அவரது கருத்துக்கள் இப்பொழுதும் மெய் சிலிர்க்க வைக்கும்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம், தம்பி எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.ஒன்றே குலம்,ஒருவனே தேவன், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.என்பது போன்ற தத்துவங்கள் கேட்க, கேட்க சிந்திக்க வைக்கும். நிலச்சுவான்கள், மிட்டா மிராசுதார்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலைகளை மாற்றி சாதாரண மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தவர் அண்ணா. 1967 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சி மீது நம்பிக்கை இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். குண்டடிபட்ட எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர்.அவரது மறைவுக்கு பின்னால் முதல்வர் ஜெயலலிதா ஆள்வதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அண்ணா திமுகவினர் என்பதை மாற்றி காட்டினார். இன்று அவரது உருவம் பதித்த அண்ணா தி.மு.க. கொடி பறக்காத இடமே இல்லை என்று கூறும் வகையில் முதல்வர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டி காத்து வருகிறார். எனவே, வருகின்ற காலங்களில் இதுபோன்று ஆதரவை அவருக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தில் தலைமை  பேச்சாளர் கோபி காளிதாஸ், கருப்பசாமி எம்.எல்.ஏ, துணை மேயர் சு.குணசேகரன்  வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினார். 
சார்பு அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே,என்.சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ், ஜெகதாம்பாள்,கருணாகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், அட்லஸ் லோகநாதன்,எஸ்பி.என்.பழனிசாமி, உஷா ரவிக்குமார், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், சாகுல் ஹமீது, அண்ணா தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி, நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், சரவணா, ரவிகுமார் உள்ளிட்டவர்கள், அவினாசி நகர செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம்,பிரியா சக்திவேல், உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், ராஜ்குமார், நீதிராஜன், பி.லோகநாதன்,சுந்தராம்பாள் கேசவன், கோமதி, மும்தாஜ் ரசூல்,பரமராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: