Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    





அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதலே ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை(டிசம்பர் 29) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிமாறும் நேரமான
மதியம் 12 மணிக்கு பின்னர் பேருந்துகளை இயக்குவதற்கு அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎஃப் உள்ளிட்ட எதிர்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மாற்று ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வரவில்லை. இதையடுத்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு, திருப்பூர் மாவட்ட பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் 558 பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்பட்டன. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்துப் பிரச்னை ஞாயிற்றுக்கிழமை முழுமையாகச் சமாளிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

0 comments: