Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    



அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
 
சீன அதிபர் ஜி ஜின் பிங் 3 நாள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பான செய்தியை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் ஒரு நாள் மாலையில் ஒளிபரப்பியது.
 
அப்போது, செய்தி வாசிப்பாளர் சீன அதிபர் பெயரின் முதல் இரு ஆங்கில எழுத்துக்களான ‘எக்ஸ்ஐ’ என்பதை ‘ஜி’ என உச்சரிப்பதற்குப் பதிலாக ‘எக்ஸ்ஐ’ என்ற எழுத்துக்களை ‘11‘ (இலெவன்) என்னும் ரோமானிய எண்ணைக் குறிக்கும் எழுத்துக்கள் என்று கருதி ‘லெவன் ஜின்பிங்’ என வாசித்து விட்டார்.
 
இது குறித்து தூர்தர்ஷன் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சீன அதிபரின் பெயரை தவறாக உச்சரித்த அந்த செய்தி வாசிப்பாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
அவர் தற்காலிக செய்தி வாசிப்பாளர் என்றும், வழக்கமான செய்தி வாசிப்பாளர் விடுப்பில் இருக்கிறபோது, இத்தகைய தற்காலிக செய்தி வாசிப்பாளர்களின் பணி பயன்படுத்தப்படுகிறது என்றும் தூர்தர்ஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments: