Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
நாட்டின் நம்பிக்கைகளாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இந்திய பாரத தேசத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் நல்லொழுக்கத்தோடு நெறிப்படுத்தி நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் பெருமக்களையேச் சாரும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை மூலமே, நாளைய உலகின் சிறந்த வல்லமை சக்தி மிக்க மனிதர்களை உருவாக்க முடியும்.
ஆசிரியர்கள் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொண்டு பாட புத்தகத்திற்கு அப்பாற்பட்டு கல்வி அறிவோடு, கலாச்சார பண்பாட்டையும், நாளைய எதிர்கால தேவையையும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து தேவையை உணர்ந்து கற்றுக்கொடுத்தால் நாளைய சமுதாயமும், பாரதமும் வளமானதாக உருவாக்க முடியும் என இந்நாளில் உறுதி எடுத்துக் கொண்டு, குருவாக விளங்குகின்ற ஆசிரிய பெருமக்களுக்கு உங்கள் பணி நாளும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

0 comments: