Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி விஜயமங்கலம் ரோட்டில் தியானேஸ்வரன்(வயது 26) என்பவர் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலைக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மாற்றி உயர் அழுத்த மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் தியானேஸ்வரன் தனது அரிசி ஆலைக்கு உயர் அழுத்த மின்இணைப்பு அனுமதிக்க கேட்டு திருப்பூர் அவினாசி ரோடு குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த செயற்பொறியாளர் சுப்பிரமணியம் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பை மாற்றி கொடுப்பதாக கூறியுள்ளார்.அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது என்று தியானேஸ்வரன் கூறவே, இருவரும் பேரம் பேசி முடிவில் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பை மாற்றி கொடுக்கிறேன் என்று சுப்பிரமணியம் கூறியுள்ளார். ஆனால் தியானேஸ்வரனுக்கு லஞ்சம் கொடுப்பதில் சிறிதும் விருப்பம் இல்லை. இதனால் அவர் இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
உடனே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.20 ஆயிரத்துக்கு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை தியானேஸ்வரனிடம் கொடுத்து, அதை செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி நேற்று காலை தியானேஸ்வரன் போலீசார் கொடுத்த பணத்துடன் திருப்பூர் அவினாசி ரோடு குமார்நகரில் உள்ள திருப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார்.அங்கு தனது அலுவலக அறையில் இருந்த செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் ரசாயன பொடி தடவிய 20 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுக்களை தியானேஸ்வரன் கொடுத்தார். அதை சுப்பிரமணியம் வாங்கி தனது மேஜை டிராயரில் வைத்ததாக தெரிகிறது. உடனே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் பொறியாளர் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் சுப்பிரமணியத்திடம் லஞ்சஒழிப்பு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். இதைதொடர்ந்து பொறியாளர் சுப்பிரமணியத்தின் மீது ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் சுப்பிரமணியத்தை ஆஜர்படுத்தி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 comments: