Thursday, October 16, 2014
திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவருடைய கணவர் சாமிநாதன். சிவகாமியின் தோழியான திருச்சி லால்குடியைச் சேர்ந்த பரமேஸ்வரி(வயது 50) மற்றும் கருணாகரன், தங்கவேல் ஆகிய 5 பேரும் சேர்ந்து திருப்பூர் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி கொடுப்பதாக கூறி பணம் வசூலித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 2012–ம் ஆண்டில் பல மகளிர் சுய உதவி குழுக்களிடம் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி கமிஷன் தொகை பெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(34) உள்பட 25 பேர் தங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்காக பரமேஸ்வரி மூலமாக சிவகாமிக்கு ரூ.25 லட்சம் வரை கமிஷன் தொகை கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கு சிவகாமி, குறைந்தவட்டியில் வங்கிக்கடன் பெற்று கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொடுத்த ரூ.25 லட்சம் கமிஷனையும் சிவகாமி திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோபாலகிஷ்ணன் உள்ளிட்ட 25 பேர் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சிவகாமி, கருணாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சாமிநாதன் முன்ஜாமீன் பெற்றார். தலைமறைவாக இருந்த பரமேஸ்வரி, தங்கவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் திருச்சி சென்று பரமேஸ்வரியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான தங்கவேலை தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
0 comments:
Post a Comment