Thursday, October 16, 2014

On Thursday, October 16, 2014 by farook press in ,    
தாராபுரத்தில் 10–க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு சென்று வர காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோக்களை பயன்படுத்துகிறார்கள். அப்போது அதிக எண்ணிக்கையிலான மாணவ–மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிச்செல்வதாகவும், ஒரு ஆட்டோவில் 15 முதல் 20 மாணவ–மாணவிகள் வரை அடைத்து வைத்து செல்வதாகவும், இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், எனவே முன்னரே தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பள்ளி விடும் நேரம் சர்ச் சாலையில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகள் முண்டியடித்து நெருக்கடியாக ஏற்றி செல்வது தெரியவந்தது. மேலும் பல ஆட்டோக்களுக்கு உரிமம் இல்லை என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாத டிரைவர்களும் ஆட்டோவை ஓட்டியது தெரியவந்த
இதையடுத்து அதிக எண்ணிக்கையிலான பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டி ஆட்டோ டிரைவர்களை போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

0 comments: