Saturday, October 25, 2014

On Saturday, October 25, 2014 by Unknown in ,    
கரூர் அருகே திருக்காம் புலியூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஸ்ரீவர்ஷன் (வயது 13) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. இதில் ஸ்ரீவர்ஷனின் பெற்றோரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஸ்ரீவர்ஷனும் சென்றிருந்தார்.
கூட்டம் முடிந்து திரும்பிய ஸ்ரீவர்ஷன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கண்டு கதறி அழுத பெற்றோர் கரூர் டவுன் போலீசிற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவம் இடம் சென்ற இன்ஸ்பெக்டர் சென்ட்ரிக் இமானுவேல், சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ஸ்ரீவர்ஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: