Saturday, October 25, 2014

On Saturday, October 25, 2014 by Unknown   

சென்னையில் மூடப்படாத 
ஆழ்துளை கிணறு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் விவேகானந்தா நகர், அவ்வையார்  தெருவில் என் 03 / 02 வசித்து வருபவர் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் 80 அடி ஆழத்திற்கு போர்வெல் மூலம் பணிகளை மேற்கொண்டு உள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது இதனால் மண்டலம் 4 உள்ள மாநகராட்சி அதிகாரிகளான காமராஜன் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதன் விளைவாக பணிகள் நிறுத்தபட்டு உள்ளது. எனினும் 80 அடி ஆழத்தில் உள்ள பள்ளம் மூடபடாமல் இருப்பதினால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். 

0 comments: