Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் அருகே மீன்கடைகளுக்கு பின்புறம் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் சமைக்கப்படும் உணவின் சுவை குறித்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு விட்டது. எனவே இந்த உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் அம்மா உணவகம் அருகே மீன் மார்க்கெட் இருப்பதாலும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அம்மா உணவகம் அருகே கொட்டப்படுவதாலும் அங்கு துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.

0 comments: