Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
சத்தி வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் வன ஓடைகளில் யானைகள் குளித்து கும்மாளம் போடுகினசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனு£ர், தாளவாடி, கேர்மாளம், தலமலை, கடம்பூர் வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய் மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் கிடைத்து வந்தது. இதனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்தன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டுபோனது. மேலும் வனப்பகுதி முற்றிலும் காய்ந்துபோனது. இதனால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தியது.இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சத்தியமங்கலம் வனப்பகுதியான தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வன ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.
கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் ரோட்டோரம் ஓடும் வன ஓடைகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக சென்று குளித்து கும்மாளம் அடிக்கின்றன. பின்னர் வனஓடைகளில் உள்ள தண்ணீரை தாகம் தீர குடித்துவிட்டு செல்கின்றன.

0 comments: