Saturday, October 18, 2014
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளேஅண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள்திருப்பூர் மேயர் விசாலாட்சி சூளுரை
திருப்பூர்,அக்.18-
ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் என திருப்பூர் மேயர் விசாலாட்சி கூறினார்.
திருப்பூர் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு விடுதலை ஜாமீன் கிடத்ததையடுத்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பழைய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டனர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பினர்.மேலும்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 21நாட்களாக அணிந்திருந்த கருப்புச்சட்டையை கழற்ற்றி விட்டு வெள்ளை சட்டையை அணிந்துக்கொண்டனர்.
ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது குறித்து மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும்,உள்நோக் கத்துடனும்,பகைமையுணர்ச்சியோடு ம்,வெறுப்புடனும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீது அரசியல் எதிரிகளால்,அவர் மீது கொடுக்கப்பட்ட பொய் வழக்கில் எதிரிகளுக்கு தற்காலிகமான வெற்றி கிடைத்தது.அதன் அடிப்படையில் ஜெயலலிதா 21நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அவர் விடுதலை பெற வேண்டி அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களின் அறப்போராட்டத்தினா லும்,அருள் வேண்டுதல்களாலும் ஜாமீனில் வெளியானது மனதிற்கு நிம்மதி தருகிறது.கூடிய விரைவில் அவர் பொய் வழக்கில் இருந்து முழு வெற்றிப்பெற்று முற்றிலுமாக வழக்கிலிருந்து விடுப்பட்டு நரகாசுரர்களை அழித்து நாடாளும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஜெயலலிதா நாடாளும் நன்நாளே தமிழர்களுக்கு தீபாவளி திருநாள்,
இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி கூறினார்.
முன்னதாக நேற்று காலை மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் அக்கட்சியின் 43 வது ஆண்டு துவக்கவிழா குள்ளிச்செட்டியார் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் எளிமையான முறையில் கொடியேற்று விழா நடந்தது.அதன் பின்னர் பார்க் ரோட்டில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலைக்கு நடந்து சென்று நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயலலிதாபேரவை செயலாளர்வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி.மார்க்கெட் நா.சக்திவேல், அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், ஏ.ஸ்டீபன்ராஜ்,ஏ.எஸ்,சதீஷ், 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், கோமதிசம்பத், வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், பூளுவபட்டி பாலு, வேலம்பாளையம் அய்யாசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ஹரிஹரசுதன், சி.எஸ் .கண்ணபிரான், ரகுநாதன், பி.கே.எஸ்.சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், அசோக்குமார்,பெரிச்சிபாளையம் ஈஸ ்வரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தி னம்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், கு ணசேகர், விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, சபரீஷ்வரன், செந்தில்குமார், பேபி தர்மலிங்கம், முன்னால் கவுன்சிலர்கள் சு.கேசவன்,ருக்கு மணி, ராஜகோபால், பேபி பழனிசாமி மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன், நீதி ராஜன், ஆண்டவர் பழனிசாமி, பங்க் என்.ரமேஷ், என்.சரவணன், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன்,ராஜேந்திரன், மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், வேங்கை வி ஜயகுமார், எம்.ஜி.குணசேகரன், மதுரபாரதி உள்ளிட்டவர்களும், பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன்,மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தராம்பாள் கேசவன், மும்தாஜ், இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment