Saturday, October 18, 2014
திருப்பூர் வெங்கமேடு வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பிரபல கல்வியாளர்கள், சமூக அறிஞர்கள் பங்கேற்று கருத்துரைகள் வழங்கினர்.
திருப்பூர் வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சனியன்று ஜெகா கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி வளர்ச்சிக்குழுத் தலைவர் டிக்ஸன் குப்புசாமி தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சிதம்பரநாதன், 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், பெற்றோர் ஆசிரியர் குழுத் தலைவர் ஜெகநாதன், பொருளாளர் கே.முருகேசன், நிர்வாகக்குழு உறுப்பினர் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இவர்களுடன் பத்மாவதிபுரம் அறிவுத்திருக்கோயில் நிர்வாகிகள் குணசேகரன், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் 266 பேருக்கும், பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் 264 பேருக்கும் தனித்தனி அரங்குகளில் ஆலோசனை வழங்கப்பட்டன. அதேபோல் பள்ளி ஆசிரியர்கள் 60 பேருக்கும், மாணாக்கர்களின் பெற்றோர்கள் சுமார் 300 பேருக்கும் தனித்தனியாக நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதில் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கே.செல்வராஜன், அமிர்தா பல்கலைக்கழக மக்கள் தொடர்பு இயக்குநர் பேராசிரியர் எஸ்.ரங்கநாதன், கே.பி.ஆ்ர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர், பயிற்சியாளர் பொறிஞர் எம்.தேவதாஸ், மனோதத்துவ ஆலோசகர் டாக்டர் எம்.எஸ்.கே.முகையதீன், தைரோகேர் இயக்குநர் ஏ.ரத்தினசாமி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் புவியரசு, கோவை பிஎஸ்ஜி எப்எம் ரேடியோ திட்ட இயக்குநர் பி.சுதாகர், யுவதி பெண்கள் அமைப்பின் நிறுவனர் ஏ.எஸ்.மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அவர்களது சமூகப் பொருளாதார நிலைக்கு ஏற்ப சிறந்த எதிர்காலத்தைத் தேர்வு செய்வதற்கான பொருத்தமான ஆலோசனைகள் வழங்கினர்.
மாணவர்களுக்கு பாடம் பயிலும் முறை, நினைவில் வைத்துக் கொள்வதற்கான நுட்பம், தேர்வு அச்சத்தில் இருந்து விடுபடுதல், தாழ்வுமனப்பான்மையை புறந்தள்ளுதல், உற்சாகப்படுத்துதல், உடல்நலம் பேணுதல் கையெழுத்து நுட்பம், நேர மேலாண்மை குறித்து விரிவாக விளக்கினர்.
அதேபோல் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் திறனை கண்டறிந்து பயிற்சி அளிப்பது, அவர்களை ஊக்கப்படுத்துவது, ஆளுமையை மேம்படுத்துவது தொடர்பாகவும் விளக்கினர். பெற்றோர்கள் மாணவர்களிடம் வைத்துக் கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றது, மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் படிக்கும் சாமானிய வீட்டுப் பிள்ளைகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் வெற்றி பெறுவதற்காக தேர்ந்த வல்லுநர்களைக் கொண்ட இந்த முகாம் நடத்தப்பட்டதாக பள்ளி வளர்ச்சிக்குழுவினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment