Wednesday, October 29, 2014

On Wednesday, October 29, 2014 by Unknown in ,    

கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி

கன மழையால்பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரண உதவி எம்எல்ஏ வழங்கினார்                                          அரவக்குறிச்சி, : கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சியில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமி வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.

அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து 5 அடி உயரம் வரை தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு உள் ளிட்ட மளிகை சாமான்கள், பாத்திரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி எம்எல்ஏ கே.சி. பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, சவேரியார் தெரு, சின்னப்ப பள்ளிவாசல் தெரு, பூச்சாங்கிணறு தெரு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வை யிட்டு பொதுமக்களிடம் நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 60 குடும்பத்தினருக்கு தலா ரூ. 1000 மற்றும் உணவுப் பொட்டலம் உள்ளிட்ட வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன் னியூர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி நகரச் செயலாளர் அண்ணா துரை, பள்ளபட்டி நகர திமுக செயலாளர் தோட்டம் பசீர்அகமது, இளைஞர் அணி, ஆனந்தகுமார், திருக்குமார் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


0 comments: