Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
அறச்சலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
அறச்சலூர் நடுவீதியை சேர்ந்தவர் அன்புராஜ். அவருடைய மகன் அருண்குமார் (வயது 17). அறச்சலூரில் உள்ள ஒரு இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதிபூஜை என்பதால், கடையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது கடையில் உள்ள தள்ளுவண்டியை கழுவுவதற்காக அருண்குமார் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.
வாய்காலுக்கு சென்றவர் மாலை வரை கடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் ஊழியர்களுடன் வாய்க்காலுக்கு சென்று பார்த்தார்.
வாய்க்கால் கரையில் தள்ளுவண்டி நின்றது. அருண்குமாரின் உடைகள் கிடந்தன. அருண்குமாரை காணவில்லை. இதனால் அவர் வாய்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் அருண்குமாரின் பெற்றோருக்கும், அறச்சலூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்து, அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருண்குமாரை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அறச்சலூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊத்தங்காடு என்ற இடத்தில் வாய்க்கால் தண்ணீரில் அருண்குமார் பிணமாக மிதந்தார். இதுபற்றி அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டார்கள். அருண்குமார் வாய்க்காலில் இறங்கியபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனின் உடலை பார்த்து அருண்குமாரின் பெற்றோர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

0 comments: