Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவாவுடன் இணைந்து புது படத்தில் நடிப்பேன் என்று நடிகர் விஷால் கூறினார்.விஷால், சுருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி இயக்கியுள்ளார். தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகிறது.
 இதையொட்டி விஷால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–பூஜை படம் தமிழ், தெலுங்கில் தீபாவளிக்கு வருகிறது. ஏற்கனவே நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு படங்களை தயாரித்தேன். பூஜை படத்தையும் நானே தயாரித்து இருக்கிறேன். குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக வந்துள்ளது. சத்யராஜும் இப்படத்தில் நடித்துள்ளார். அவரோடு நடிப்பது பெருமையாக இருந்தது.
சுருதிஹாசனுக்கு நல்ல கேரக்டர். ரொம்ப அழகாக தெரிவார். நல்ல காதலும் படத்தில் இருக்கிறது.ஹரியுடன் தாமிரபரணி படத்தில் இருந்தேன். இப்போது மீண்டும் சேர்ந்தது இருக்கிறோம். அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை நகரை பின்னணியாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். கதை கோவையில் துவங்கி பாட்னாவில் முடியும். அரிவாள், துப்பாக்கியெல்லாம் தூக்கியுள்ளேன். தயாரிப்பாளரானதும் தூக்கம் குறைந்து விட்டது. நான் தயாரித்த படங்களில் பூஜை முக்கிய படமாக இருக்கும்.
 325 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறோம்.இப்படத்தை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கும் ஆம்பள படத்தில் நடிக்கிறேன். பிறகு சுசீந்திரன் படத்தில் நடிக்க உள்ளேன். அப்படத்தில் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். லட்சுமிமேனனை ஜோடியாக்கும் படி டைரக்டர்களை நிர்ப்பந்திக்கவில்லை.மேலும் விஷால் கூறும் போது ‘‘நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட சம்பளம் வாங்காமல் புது படமொன்றில் நடிக்க இருக்கிறேன். இதில் என்னுடன் ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட மேலும் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். யாரும் சம்பளம் வாங்க மாட்டார்கள். இலவசமாகவே நடிக்கிறார்கள். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு துவங்கும். டைரக்டர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை’’ என்றார்.சுருதி ஹாசன் பேசும் போது, பூஜை நல்ல படம். இதில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. புது அனுபவம் கிடைத்தது திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று நான் சொன்னதாக வெளி வந்த செய்தியில் உண்மை இல்லை. நான் அப்படி சொல்லவே இல்லை என்றார்.சத்யராஜ் கூறும் போது நான் நடிக்க வந்து 36 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது குணசித்திர வேடங்களில் வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் நல்ல கேரக்டர்கள் அமைகிறது. பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன் என்றார்.

டைரக்டர் ஹரி, ஒளிப்பதிவாளர் ப்ரியன், தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோரும் பேசினார்கள்.

0 comments: