Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் சோகத்தில் கோவை அ.தி.மு.க. தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


கோவை பூசாரிப்பாளையம், சத்யாநகரை சேர்ந்த செல்லமுத்து என்பவருடைய மகன் ரஜினிகாந்த் (வயது 35), அ.தி.மு.க. உறுப்பினர். கட்டிடங்களுக்கு அலுமினிய ஜன்னல் மற்றும் கம்பிகளை பொருத்தும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடந்த 27–ந் தேதி முதல் ரஜினிகாந்த் சோகத்தில் இருந்தார்.
கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்த அவர், அந்த பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களிடம், ‘ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், எனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க.வினரின் உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்தின் அண்ணன் குமார் உள்பட பலர் கலந்துகொள்ளச்சென்றனர். வீட்டில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு அந்த படத்தின் முன்பு ரஜினிகாந்த் சோகமாக காணப்பட்டார்.
திடீரென்று விஷத்தை எடுத்து குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

0 comments: