Tuesday, October 28, 2014

On Tuesday, October 28, 2014 by farook press in ,    
செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன் மோசடியில் சிக்கியுள்ள நகைகளை மீட்டுத்தர பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆர்.பழனிச்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி ஒன்றியக்குழுச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுக் கொடுத்தனர்.
செங்கப்பள்ளி கூட்டுறவு சங்கச் செயலர் சோமசுந்தரம், நிர்வாகப் பொறுப்பில் இருந்த தலைவர் சின்னசாமி உள்ளி்டவர்களால் நடைபெற்ற மோசடி காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 20ம் தேதி முதல் மாநில அமைச்சர், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பல தடவை சந்தித்து முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் நகைகள் சிக்கியிருக்கும் காரணத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஏற்கனவே நகைகளைத் திரும்ப அளிப்பதாக உறுதியளித்த பிறகு, கூட்டுறவு துணைப் பதிவாளரும், சங்கத் தலைவரும் அந்த நகைகளை திரும்ப அளிக்காமல் மறுத்து வருகிறார்கள்.
கடன் பெற்றோர் உண்மையான அசல் அதற்குண்டான வட்டியை செலுத்த தயாராக இருக்கிறார்கள். எனவே எங்களது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் நேரில் வரவழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

0 comments: