Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
தாராபுரம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் பரதநாட்டியம் மற்றும் தப்பாட்டம் பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்தது.
எழுத்தாளர் சங்கம்
மானுடத்தை போற்றுவதிலும், மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுப்பதிலும், சுரண்டலுக்கு எதிராகவும், இந்தியாவின் இயற்கை வளங்கள் தனிநபருக்கு சென்று சேருவதை தடுக்கவும் சமுதாயத்தில் கலாச்சார வேர் கரையான் அரிக்கப்படும் போதெல்லாம், தனது எழுத்து வன்மையால் பண்பாட்டு விழுமியத்தை காக்க குரல் கொடுக்கும் இயக்கம் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கம் ஆகும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தாராபுரத்தில் தொடங்கப்பட்டு ஓராண்டாகிறது.
இந்த விழாவை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கவியரங்கம், கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தாராபுரம் அண்ணாசிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக தாராபுரம் ஆ.செல்வி நாட்டுப்புற பாடலை பாடி தனது காந்தக்குரலால் அனைவரையும் கட்டிப்போட்டார். பாரதி படல் முதல் தற்போதைய கலியுக கவிஞன்வரை தனது பாடலில் எடுத்துக்கூறி அனைவரையும் ஒருகனம் சிந்திக்க வைத்தார். அடுத்து "தகதிமிதா" நாட்டியாலயா சிறுமிகள் ஆடிய பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக "விஷமகார கண்ணன்" என்ற பாடலுக்கு மாணவிகள் ஆடியவிதம் அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.
மாணவர்கள் நடனம்
பின்னர் "இலாஸ் அமேசிங் பீட்" குழு பெயரில் கோவை அரசு கலைக்கலூரி மாணவர்கள் ஆடிய நவீன ஆட்டம் பார்வையாளர்களை திணற வைத்தது. உடம்பில் எலும்பு இருக்கிறதா? என்று அனைவரும் யோசிக்கும் வண்ணம் வளைந்து நெளிந்து ஆடி அனைவரின் கைதட்டலையும் பெற்றனர்.
அடுத்த நவரச நிகழ்ச்சியாக திருப்பூர் சிறுவர் தப்பாட்ட குழுவினரின் தப்பாட்டத்தை பார்வையாளர்கள் விழி பிசகாமல் பார்த்து மகிழ்ந்தனர்.
அதை தொடர்ந்து மானுடம் காப்போம் என்ற தலைப்பில் ஸ்டீபன் சாந்தப்பனும், சிறகுகள் விரியட்டும் என்ற தலைப்பில் விஜயகுமாரும் கவிதை வாசித்தனர். முடிவில் சைவம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் கணேஷ்குமாரும், இஸ்லாம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் ஜாகீர் உசேனும் உரையாற்றினார்கள்.
புதிய நிர்வாகிகள்
தாராபுரத்தில் தமிழ்நாடு எழுத்தார் முற்போக்கு முன்னதாக நடைபெற்ற எழுத்தாளர்–கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் மேகவர்ணன் தலைமை தாங்கினார். பட்டு வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். கிளை செயலாளர் சீரங்கராயன், மாவட்ட செயலார் ஈசுவரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

0 comments: