Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    

பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க நடிகைகள் பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தனர்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 15 நாட்களாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், நடிகர்–நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில்  தமிழக அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியன், சம்பத், ஜெயபால் மற்றும் நடிகைகள் சரஸ்வதி, குயிலி, பாத்திமா பாபு, வாசுகி மற்றும் எம்.பி.க்கள் அசோக்குமார், இளவரசன், ஹரி, அருண்மொழித்தேவன் உள்பட ஏராளமானவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.ஜாமீன் வழக்கில் ஆஜராகும் வக்கீல்கள் குழுவை தவிர சிறையில் ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்தித்து பேசவில்லை. வழக்கம்போல் இன்று வந்தவர்களும் சிறை வாசலில் சிறிது நேரம் இருந்துவிட்டு திரும்பி சென்றனர். அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே சிறை கட்டிடத்தின் முன் பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் தொண்டர்கள் ஒசரோடு சந்திப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஒசரோடு சந்திப்பில் இரும்பு தடுப்பு வேலி போடப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது.

0 comments: