Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by farook press in ,    
பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்ளும் வரை இந்த போராட்டத்தை நடத்துவேன் என்று அக்கல்லூரி ஆராய்ச்சி மாணவி தெரிவித்துள்ளார்.
மேலும் போலீசாரிடம் கல்லூரி பேராசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலத்காரம் செய்துள்ளார் என்று புகார் கூறியுள்ளார்.
மங்களூர் பல்கலைகழகத்தில் நான் கொடவா மொழி பயிலும் மாணவி கன்னடம் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்க்காக இங்கு வந்து சேர்ந்தேன்.
பேராசிரியர் வெதாவ கன்னடா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 2 தேதி அவரது வீட்டில் வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் தொடர்ந்து என்னை ஒருவருடமாக பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.பின்னர் வருத்தம் தெரிவித்து என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார் ஆனால் அவர் என்னை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.இது குறித்து நான் கல்லூரியின் துணைவேந்தரிடன் நடந்தவற்றை கூறினேன்.பின்னர் பேராசிரியர் வெதாவவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது பல்கலைகழகவிதிகளின் படி அவர் மீது சட்டபடை நடவடிக்கை எடுக்க முடியும் என்று கல்லூரி பதிவாளர் எடப்பாடித்தா கூறினார்.
என்னை அவமானபடுத்துவதுவதற்க்காக சதி நடக்கிறது நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன் இது போன்ற செயல்களில் நான் ஈடுபடமாட்டேன் என்று கூறினார்.
இந்த புகார்கள் ஆதரமற்றது என்று நிருபிப்பேன் நான் சட்டபடி இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்று கூறினார்.
இதற்கிடையில் கல்லூரி மாணவிக்காக மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    

பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க நடிகைகள் பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தனர்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 15 நாட்களாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், நடிகர்–நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில்  தமிழக அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியன், சம்பத், ஜெயபால் மற்றும் நடிகைகள் சரஸ்வதி, குயிலி, பாத்திமா பாபு, வாசுகி மற்றும் எம்.பி.க்கள் அசோக்குமார், இளவரசன், ஹரி, அருண்மொழித்தேவன் உள்பட ஏராளமானவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.ஜாமீன் வழக்கில் ஆஜராகும் வக்கீல்கள் குழுவை தவிர சிறையில் ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்தித்து பேசவில்லை. வழக்கம்போல் இன்று வந்தவர்களும் சிறை வாசலில் சிறிது நேரம் இருந்துவிட்டு திரும்பி சென்றனர். அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே சிறை கட்டிடத்தின் முன் பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் தொண்டர்கள் ஒசரோடு சந்திப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஒசரோடு சந்திப்பில் இரும்பு தடுப்பு வேலி போடப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது.