Friday, October 10, 2014

On Friday, October 10, 2014 by farook press in ,    
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க
கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
திருப்ப+ரில் திங்கட்கிழமை நடக்கிறது
   படித்த இளைஞர் தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் திங்கட்கிழமை திருப்ப+ரில் நடைபெறுகிறது என்று திருப்ப+ர் மாவட்ட தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் என்.ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 
  திருப்ப+ர் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் வரையிலும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.25லட்சம் வரையிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரையிலும் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வழங்கி புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வழி வகை செய்யப்பட்டு வருகின்றன். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவை சார்நத தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு அரசின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்ப்பவர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.லட்சம்சத்து 50 ஆயித்திற்குள் இருக்க வேண்டும். இது தவிர மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இதர திட்டங்களான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தபடுகின்றன. 
   இந்த திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் 13.10.2014 தேதியன்று திருப்ப+ர் அவினாசி ரோட்டில் உள்ள தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் பி.ரங்கசாமி தலைமையில் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் அசல் கல்விச்சான்றுடன் மேற்கண்ட நாட்களில் நேரில் வந்து ஆலோசனை பெற்று தொழில் துவங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களை திருப்ப+ர் மாவட்ட அவினாசி ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நேரிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

0 comments: