Friday, November 07, 2014
இண்டியன் ஆயில் கார்போரேசன் நிறுவனம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இண்டியன் ஆயில் கார்போரேசன் டீலர்கள் இணைந்து இண்டியன் ஆயில் கார்போரேசன் நிறுவனத்தின் தரம் மற்றும் அதன் அளவீடுகள் சரியாக உள்ளதா? மக்களுக்கு இந்த நிறுவனம் எந்தெந்த வகையில் சேவை செய்து வருகிறது உள்பட பலவேறு அம்சங்கள் குறித்து பொது மக்களுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினம்தோறும் தீபாவளி என்ற விழாவை கடந்த 1 மாதமாக கொண்டாடிவருகிறது. இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 28 இண்டியன் ஆயில் கார்போரேசன் டீலர்கள் சார்ந்த பெட்ரோல் பங்குகளில் தினமும் ரூ 300 முதல் ரூ 500 வரை பெட்ரோல் அடிக்கும் வாடிக்கையாளர்களில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ 100 மதிப்புள்ள பெட்ரோல் அல்லது அதன் மதிப்பிலான ஒரு பொருள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ரூ 200 க்கு மேல் பெட்ரோல் அடிப்பர்வர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு,அதில் கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ 44 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் என 28 பேருக்கு ரூ 12 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான 28 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி 28 பெட்ரோல் பங்குகளிலும் தனித்தனியாக அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து தினந்தோரும் தீபாவளி திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட அனைத்து அதிர்ஷ்டசாலிகளுக்கும் மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா பெரியார் காலனியில் உள்ள பரணி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கோவை இண்டியன் ஆயில் கார்போரேசன் முதன்மை டிவிசனல் சில்லறை விற்பனை பிரிவு மேலாளர் சரத்குமார் தலைமை தாங்கினார். ஐ.ஒ.பி.வங்கி உதவி மேலாளர் வர்கிஸ், இண்டியன் ஆயில் கார்போரேசன் திருப்பூர் ஏரியா உதவி மேலாளர் கார்த்திக்செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணி பெட்ரோல் பங்க உரிமையாளர் நடராஜன் வரவேற்று பேசினார். விழாவில் ஸ்ரீ லட்சுமி ஏஜென்சீஸ் தங்கராஜ், சுப்ரீம் பேரடைஸ் ராதா ஆகியோர் பேசினார்கள். இதைதொடர்ந்து 28 அதிர்ஷ்டசாலிகளுக்கும் கோவை இண்டியன் ஆயில் கார்போரேசன் முதன்மை டிவிசனல் சில்லறை விற்பனை பிரிவு மேலாளர் சரத்குமார் மோட்டார் சைக்கிள்களை வழங்கினார். முடிவில் பகவதி ஏஜென்சீஸ் தனசேகர் நன்றி கூறினார்.விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
குலுக்கல் முறையி தேர்வுசெய்யப்பட்ட அதிர்ஷ்டசாலி களுக்கு கோவை இண்டியன் ஆயில் கார்போரேசன் முதன்மை டிவிசனல் சில்லறை விற்பனை பிரிவு மேலாளர் சரத்குமார் மோட்டார் சைக்கிள்களை வழங்கியா போது எடுத்த படம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment