Friday, November 07, 2014

On Friday, November 07, 2014 by Unknown in    
உடுமலை பாதாள சாக்கடை பணிகளால் பொதுமக்கள் அவதி .பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைகள் சீரமைக்க துணைசபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் அதிகாரிகளுக்கு அதிரடி உத்திரவு 



 உடுமலையில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகளால் குண்டும் குழியுமாக ரோடுகள்  உள்ளன .திருப்பூர் புறநகர் மாவட்ட செயாலளரும் தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்ரோடுகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்திரவிட்டார்.
பாதாள சாக்கடை திட்ட பணிகள்   தொடங்கப்பட்டு ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது .தோண்டப்பட்ட குழிகள் பெய்த மழையினால் பள்ளம் ஏற்பட்டு சேறும் சகதியுமாக உள்ளது .வாகன ஓடடிகளும் பொது மக்களும் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். .வாகனத்தில் செல்வோர் நடந்து  செல்பவர்கள் தடுமாறி கிழே விழுகின்றனர்.அதனால் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுகொண்டார். திருப்பூர் ரோடு ,அண்ணா குடியிருப்பு ,கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு, தாஜ் தியேட்டர்  ரோடு ,தளி ரோடு ,போன்ற பகுதிகளை நடந்தே  சென்று பார்வையிட்டார் ,பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கி உத்தரவிட்டார்.ஆய்வின் போது சி. சண்முகவேலு,  M. L. A ,
சி. மகேந்திரன் M. P,அரசு கேபிள் டி . வி  வாரியத்தலைவர்  
கே. ராதாகிருஷ்ணன் ,கோட்டாட்சியர் சாதனைக்குறள் ,வட்டாட்சியர் சைபுதீன், நகரச்செயலாளர் கே. ஜி. சண்முகம்,நகர்மன்றத்தலைவர்
 கே.ஜி.எஸ்.ஷோபனா,துணைத்தலைவர் கண்ணாயிரம் ,நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், பொறியாளர் மதியழகன் , பொறியாளர் கண்ணையா ,நகராட்சி கவுன்சிலர்கள் வனிதாமணி,
என்..ராஜேந்திரன்,சி.தங்கராஜ் ,ஆகியோர் கலந்து கொண்டனர் .

0 comments: