Sunday, November 16, 2014

On Sunday, November 16, 2014 by farook press in ,    
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு 2015ம் ஆண்டு மார்ச் 20 முதல் 22ம் தேதி முடிய திருப்பூரில்​ நடைபெறுகிறது.
இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக 163 பேர் கொண்ட வரவேற்புக்குழு வெள்ளியன்று அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்திலேயே பலத்த கரவொலிக்கு இடையே மாநாட்டு நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் தமுஎகச மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை துவக்கி வைத்து மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசினார்.
இதைத் தொடர்ந்து தமுஎகச மாநாட்டு வரவேற்புக்குழு பட்டியலை முன்மொழிந்து மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் பேசினார். இதில் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக எம்.ஜீவானந்தம், செயலாளராக ஆர்.ஈஸ்வரன், பொருளாளராக - ஆர்.குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக்குழு கௌரவத் தலைவராக கே.தங்கவேல் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டார். 
இத்துடன் புரவலர்களாக எஸ்.எஸ்.எம். வேலுச்சாமி, ஜெய்ஸ்ரீராம் கே.எம்.தங்கராஜ், லிங்க்ஸ் சௌகத் அலி, கே.பி.கே.செல்வராஜ், யுனிவர்சல் ராஜகோபால், வீனஸ் குமாரசாமி, ஆர்.ஏ.ஜெயபால், எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், மணியம் ராமசாமி, யுனிவர்சல் பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வரவேற்புக்குழுத் துணைத் தலைவர்களாக ஆடிட்டர் லோகநாதன், வி.டி.சுப்பிரமணியம், விழிப்பு எம்.நடராஜன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கவிஞர் மகுடேஸ்வரன், கீதாஞ்சலி கோவிந்தப்பன், எம்பரர் பொன்னுசாமி, மா.நாட்ராயன், செ.முத்துக்கண்ணன் மற்றும் வரவேற்புக்குழு துணைச் செயலாளர்களாக கவிஞர் கோவை சதாசிவம், பி.ஆர்.கணேசன், ச.முருகதாஸ், து.ராஜகோபாலன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் 163 பேர் கொண்ட வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டுப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற 19 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பெயர் குறிப்பிட விரும்பாத பிரமுகர் ஒருவர், தனது தாயார் ராசாம்மாள் பெயரில் ரூ.1லட்சம் மாநாட்டு நிதியாக வழங்கினார். அதேபோல் மற்றொரு கட்டுமான தொழில் துறையைச் சேர்ந்தவர் ரூ.1லட்சம் வழங்கினார். பலத்த கரவொலியால் அந்த அரங்கம் அதிர்ந்தது.
இக்கூட்டத்தில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள், விருதுநகர் மாவட்டச் செயலாளர் லட்சுமிகாந்தன், கோவை மாவட்டச் செயலாளர் மணி, ஈரோடு மாவட்டச் செயலாளர் சங்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார்.
தமிழகத்தின் முற்போக்கு பண்பாட்டு பாரம்பரியத்தை முன்னெடுத்து, அனைத்து மனங்களையும் ஒன்றாகச் சங்கமிக்கச் செய்யும் விதத்தில் திருப்பூர் மாநாடு தமிழக வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று தலைவர்கள் குறிப்பிட்டனர். 
பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து தமுஎகச அமைப்பின் நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் உள்பட பெருந்திரளானோர் இதில் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் மா.நாட்ராயன் நன்றி கூறினார்.




0 comments: