Wednesday, November 12, 2014

On Wednesday, November 12, 2014 by Unknown in ,    

வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (12–ந்தேதி) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தொழிற்சங்க தலைவர்கள் நவரத்தின பாண்டி, ராஜாராம், ராமநாதன் ஆகியோர் இன்று கூட்டாக மதுரையில் நிருபர்களிடம் ,
ஊதிய உயர்வு சம்பந்தமாக நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல வருடங்களாக போராடி வருகிறோம். 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் 11 சதவீத ஊதிய உயர்வை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஊழியர்களின் பற்றாக்குறை, புதிய கிளைகள் தொடக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் வங்கி ஊழியர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 12–ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளோம்.இதேபோல் அடுத்த மாதம் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் மண்டல அளவில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.மதுரையில் 500–க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. இதில் வேலை பார்க்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி நாளை (11–ந்தேதி) தல்லாகுளத்தில் வங்கி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் 12–ந்தேதி மதுரை ரெயில் நிலையம் எதிரே வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தனர்

0 comments: