Thursday, November 27, 2014

மதுரை பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மண்டல செயற்குழு கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் ராம்நாட் டி.ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாவட்ட தலைவர் முத்தனசாமி, பொதுச்செயலாளர் குமாரலிங்கம், துணை தலைவர் எம்.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட துணை தலைவர் அய்யனார் வரவேற்றார். மண்டல பொதுச்செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
அவனியாபுரம் காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவனியாபுரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை விரைவாக அமைக்கப்பட வேண்டும்.
வார்டு எண்: 55, 56, 58, 59, 60, 61, 62 ஆகிய அனைத்து வார்டுகளில் விரிவாக்க பகுதிகளில் முறையான தார் சாலை மற்றும் மின்விளக்கு அமைக்க வேண்டும். முறையாக ரேஷன் பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடகை கட்டிடத்தில் இயங்குகின்ற அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளினால் இரவில் வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இரண்டு மதுபான கடைகளையும் வேறு இடங்களில் மாற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளதால் நாய்களை ஒழிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment