Monday, November 24, 2014

On Monday, November 24, 2014 by farook press in ,    

திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமான பயணிகளிடம் நடந்து வருகிறார்கள்.
 வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தென்பகுதி ஏழை ஆண், பெண் இருபாலரிடம் இவர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி அதிகபிரசிங்கிதனமான கேள்விகளை கேட்டு மனக்கஸடத்தை ஏற்படுத்தி அசிங்கபடுத்துகின்றனர்.
 விமான பயணிகள் ஏதேனும் புரியாமல் விளக்கம் கேட்டால் இங்கேயே இப்படி ? அங்கே போய் என்ன புடுங்கபோற என்கிறார் ஒரு அதிகாரி
வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று அவர்கள் ஈட்டும் சிறுசேமிப்பில் வாங்கும் 4 அல்லது 5 பவுனை சோதனை செய்த பின் இது பொண்டாட்டிக்கா இல்லை வப்பாட்டிக்கா என கேட்கும் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.
 அதுவும் இவர்கள் மலேசிய குடியுரிமை தமிழர்களிடம் பழகும் பாங்கு இருக்கிறதே ? நல்ல வேலை நம்ம தாத்தா காலத்திலேயே நாம இங்கிருந்து போய்விட்டோம் என்று அவர்கள் வாயலயே சொல்லுற அளவுக்கு இருக்கு...
 இது எல்லாம் முடிந்த பிறகு ஏதாவது குடுத்துட்டு போயான்னு கேட்கும் கடைநிலை காவலர்கள், பணம் கையில் இல்லை என்றால் குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்க மறந்தயா ? சரக்கு வாங்க மறந்தயா ? என அநாகரிகமான கேள்விகள்...

 உள்ளயே வரும் கரண்சி புரோக்கர்கள்...
தரம் குறைந்த தண்ணீரே வராத கழிப்பறைகள்...
மரியாதை இல்லாத காவலர்கள்...
இப்படி மிகவும் கீழ்த்தரமாக திருச்சி விமான நிலைய நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

0 comments: