Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    
விவசாய நிலத்தை மனையாக்க கூடாது நகராட்சி கமிஷனர் அதிரடி ......                  குளித்தலை நகராட்சி பகுதியில், விவசாய நிலங்களை வீட்டுமனையாக்கி, விற்க கூடாது,'' என, நகராட்சி தலைவர் பவுன்ராஜ் தெரிவித்தார். கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால், விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாய நிலங்கள் வீட்டுமனையாக்குவதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், குளித்தலை பெரியபாலம் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை பகுதியில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இது குறித்து நகராட்சி கமிஷினர் பவுன்ராஜ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் கட்டப்படும் விவசாய நில வீட்டு மனைகளை பொதுமக்கள், வாங்கவோ, நில உரிமையாளர்கள் விற்பனை செய்யவோ கூடாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலஉரிமையாளர், வீட்டுமனைகள் வாங்கிய இருவருக்கும் கடிதம் அனுப்பபட்டுள்ளது. மேலும், பத்திர பதிவு அவலகத்துக்கும் வீட்டுமனைகள் பதிவு செய்யக்கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்      

0 comments: