Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by Unknown in ,    
திருப்பூரில், திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்திற்கு உள்பட்ட திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் 580 அரசுப் பேருந்துகள் உள்ளன.
கடந்த இரண்டு நாள்களாக 75 சதவீத போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், 380 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதனால், திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதி, வெளியூருக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி, பழைய பேருந்து நிலையத்தின் முன்பு, திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்து வந்த போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 48 பேரை கைது செய்தனர்.
காங்கயம், டிச. 29: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, காங்கயம் பணிமனையில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமார்சிங் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த ஆய்வின்போது சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
பல்லடம், டிச. 29: பல்லடத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளையும் இயக்குவதற்காக எம்எல்ஏ பரமசிவம் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
பல்லடத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகத்தின் பணிமனையில் மொத்தம் 82 பேருந்துகள் உள்ளன. இவற்றில் 45 பேருந்துகள், திங்கள்கிழமை வழக்கம் போல் இயக்கப்பட்டன. 37 பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்காக பல்லடம் எம்எல்ஏ கே.பி.பரமசிவம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
பேருந்துகள் மீது தாக்குதல்:
பல்லடத்தை அடுத்த கோவை சாலையில் உள்ள லட்சுமி மில் பகுதியில் இரண்டு பேருந்துகள், தாராபுரம் சாலையில் கள்ளக்கிணறு, பனப்பாளையம் பகுதியில் இரண்டு பேருந்துகள் என மொத்தம் 4 பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து நெருக்கினர்.

0 comments: