Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by Unknown in ,    

அவிநாசியில் கட்டடத் தொழிலாளியை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்ததாக, அவரது நண்பரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மேலகாயம்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் தினேஷ்(23). இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் (24), மணிகண்டன் (22). நண்பர்களாகி இவர்கள் மூன்று பேரும், அவிநாசி சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, கட்டட வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்த், நூறு ரூபாய் கேட்டு தினேஷிடம் தகராறு செய்தாராம். தினேஷ் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை ஆனந்த் சம்மட்டியால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மணிகண்டன் கொடுத்த தகவலின்பேரில் அவிநாசி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டனர். போலீஸார் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனர்.

0 comments: