Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by Unknown in ,    
சேவூர் அருகே பொங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொங்கலூர் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி (37). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, புளியம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில்அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, புளியம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், துரைசாமிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டாதால் அவர் உயிரிழந்ததாகக் கூறியும், மருத்துவர் மீது உரிய நடவடிக்கை, உரிய நிவாரணத் தொகை வழங்கக் வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் பொங்கலூர் புளியம்பட்டி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சேவூர் போலீஸார், வட்டாட்சியர் தேவமனோகரன் உள்ளிட்டோர் சமரசம் பேசினர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

0 comments: