Monday, October 20, 2014

On Monday, October 20, 2014 by farook press in ,    




On Monday, October 20, 2014 by farook press in ,    



சுல்தான்பேட்டை ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் 501   நிர்வாகிகள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையானதை யொட்டி மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி மலைக்கோவில் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்க்கபப்ட்டது.இந்த கழ்ச்சியில் மாவட்ட பேரவை தலைவர் நாச்சிமுத்து, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருமலைசாமி, தலைவர் ஜெயச்சந்திரன் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி பேரவை செயலாளர் எஸ்.பி.ரங்கசாமி, வாரப்பட்டி ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் பிரபுராம் பிரபனேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
On Monday, October 20, 2014 by farook press in ,    
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் யு.ஆர்.கிருஷ்ணன் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர்கள் ரத்தினசாமி, தியாகராஜன், பழனிசாமி, ஆறுமுகம்,  மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

On Monday, October 20, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் சமுதாயப் பணியாற்றி வரும் நபர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தபேலா இசைக் கலைஞர் ஆறுமுக நாயனார், பார்க் விரிவாக்க நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மங்கயர்க்கரசி, ஆன்மிக பணியாற்றி வரும் ஆர்.வி.எஸ்.ஆறுமுகம், விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆர்.பிரபாகரன் ஆகிய 4 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது .
இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மண்டலச் செயலர் மார்ட்டின், மாவட்ட உதவி ஆளுநர் டாக்டர் பிரிசில்லா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். பட்டுக்கோட்டை பாஸ்கர் சிறப்புரையாற்றினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க ஆலோசகர் டாக்டர் எஸ்.சுந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நாகராஜ் ஆகியோர் நன்றி கூறினர். சக்கரபாணி, ஆனந்த், சரவணகுமார்,  குமரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

On Monday, October 20, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்  சி.சண்முகவேலு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற்றதை யொட்டியும்,மேலும் வழக்கிலிருந்தும் அவர் முழுமையாக விடுதலையாக வேண்டியும்,சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் தலைமையில் கொழுமம் காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்கு வைத்துஅபிஷேகம், சிறப்பு யாகம் செய்து மேலும் கோட்டை மாரியம்மன் கோவில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் திருக்கோவிலிலும் கடத்தூர் அருள்மிகு அர்ச்சனேஸ்வரர் அங்கப்பிரதட்சனம் திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வர் கோவிலிலும் பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் சந்தன  அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பு வழிபாடுகள் செய்தார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் ஒன்றிய செயலாளர் மெட்ராத்தி அண்ணாதுரை, மாவட்ட பேரவை செயலாளர் வாசுதேவன், ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், குமரலிங்கம் பேரூர் கழக செயலாளர் வரதராஜ் குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சிவக்குமார் துணைத்தலைவர் சிவலிங்கம் அமராவதி பாசன சபைத்தலைவர் எஸ்.ராஜ்குமார் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் .பழனிச்சாமி  துணைதலைவர் தண்டபாணி  கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி மயில்சாமி, கடத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராசு, மடத்துக்குளம் வீட்டு வசதி சங்க தலைவர் ஏசுதுரை  நீலம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

On Monday, October 20, 2014 by farook press in ,    
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடகைக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல் 18 கிலோ மீட்டர் தூரம் வரையில் குறைந்தபட்ச வாடகை ரூ.25–ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12–ம், காத்திருத்தல் கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50–ம் வசூலிக்க வேண்டும். இரவு நேர கட்டணமாக (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) மேற்கண்ட கட்டண விகிதங்களில் வாடகை கட்டணம் கணக்கிட்டு மொத்த தொகையில் கூடுதலாக 50 சதவீதம் வசூல் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே சென்னை மாநகரில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகை திருத்தி அமைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மற்றும் இதர மாவட்டங்களுக்கு ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி நிர்ணயம் செய்து இயக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாடகை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் நேற்று (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. எனவே ஆட்டோ ஓட்டுபவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களில் தற்போது பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் மீட்டர் கட்டணமானிகளில் புதிய கட்டணத்தை திருத்தி அமைக்க 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட கட்டண விகிதத்தை எழுதப்பட்டோ, அல்லது அச்சடிக்கப்பட்டோ வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பார்வையில் படும்படியாக ஒட்டப்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.