Monday, October 20, 2014

On Monday, October 20, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்  சி.சண்முகவேலு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற்றதை யொட்டியும்,மேலும் வழக்கிலிருந்தும் அவர் முழுமையாக விடுதலையாக வேண்டியும்,சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அவர் தலைமையில் கொழுமம் காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்கு வைத்துஅபிஷேகம், சிறப்பு யாகம் செய்து மேலும் கோட்டை மாரியம்மன் கோவில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் திருக்கோவிலிலும் கடத்தூர் அருள்மிகு அர்ச்சனேஸ்வரர் அங்கப்பிரதட்சனம் திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வர் கோவிலிலும் பாலபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் சந்தன  அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பு வழிபாடுகள் செய்தார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் ஒன்றிய செயலாளர் மெட்ராத்தி அண்ணாதுரை, மாவட்ட பேரவை செயலாளர் வாசுதேவன், ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், குமரலிங்கம் பேரூர் கழக செயலாளர் வரதராஜ் குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சிவக்குமார் துணைத்தலைவர் சிவலிங்கம் அமராவதி பாசன சபைத்தலைவர் எஸ்.ராஜ்குமார் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் .பழனிச்சாமி  துணைதலைவர் தண்டபாணி  கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி மயில்சாமி, கடத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராசு, மடத்துக்குளம் வீட்டு வசதி சங்க தலைவர் ஏசுதுரை  நீலம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments: