Monday, October 20, 2014

On Monday, October 20, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் சமுதாயப் பணியாற்றி வரும் நபர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தபேலா இசைக் கலைஞர் ஆறுமுக நாயனார், பார்க் விரிவாக்க நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மங்கயர்க்கரசி, ஆன்மிக பணியாற்றி வரும் ஆர்.வி.எஸ்.ஆறுமுகம், விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆர்.பிரபாகரன் ஆகிய 4 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது .
இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மண்டலச் செயலர் மார்ட்டின், மாவட்ட உதவி ஆளுநர் டாக்டர் பிரிசில்லா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். பட்டுக்கோட்டை பாஸ்கர் சிறப்புரையாற்றினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க ஆலோசகர் டாக்டர் எஸ்.சுந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நாகராஜ் ஆகியோர் நன்றி கூறினர். சக்கரபாணி, ஆனந்த், சரவணகுமார்,  குமரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

0 comments: