Monday, October 20, 2014

On Monday, October 20, 2014 by farook press in ,    
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடகைக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல் 18 கிலோ மீட்டர் தூரம் வரையில் குறைந்தபட்ச வாடகை ரூ.25–ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12–ம், காத்திருத்தல் கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50–ம் வசூலிக்க வேண்டும். இரவு நேர கட்டணமாக (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) மேற்கண்ட கட்டண விகிதங்களில் வாடகை கட்டணம் கணக்கிட்டு மொத்த தொகையில் கூடுதலாக 50 சதவீதம் வசூல் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே சென்னை மாநகரில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகை திருத்தி அமைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மற்றும் இதர மாவட்டங்களுக்கு ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி நிர்ணயம் செய்து இயக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாடகை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் நேற்று (சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. எனவே ஆட்டோ ஓட்டுபவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களில் தற்போது பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் மீட்டர் கட்டணமானிகளில் புதிய கட்டணத்தை திருத்தி அமைக்க 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட கட்டண விகிதத்தை எழுதப்பட்டோ, அல்லது அச்சடிக்கப்பட்டோ வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பார்வையில் படும்படியாக ஒட்டப்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 comments: