Monday, January 19, 2015

On Monday, January 19, 2015 by Unknown in ,    
உடுமலை வட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட சுமார் 22,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
உடுமலை நகரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடமாடும் வாகனங்கள் உள்பட 20 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், மொத்தம் 6.000 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களிலும் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பேருந்து நிலையம் அருகில் போலியோ சிறப்பு முகாமில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் துவக்கி வைத்தார். எம்எல்ஏ சி.சண்முகவேலு (மடத்துக்குளம்), மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), உடுமலை நகராட்சித் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகராட்சி ஆணையர்(பொ) கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலை ஒன்றியம்: உடுமலை ஒன்றியத்தில், எரிசனம்பட்டி, பெரியவாளவாடி, அமராவதி நகர் உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் மொத்தம் 110 மையங்கள், 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில், சுமார் 16,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

0 comments: