Monday, January 05, 2015

On Monday, January 05, 2015 by Unknown in ,    
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 225 பேருக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.
இக்கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இதற்கு, கல்லூரி முதல்வர் ரேச்சல்நான்சி பிலிப் தலைமை வகித்தார். இதில், சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனங்கள், பிபிஓ மையங்கள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் உள்பட 21 நிறுவனங்கள் பங்கேற்றன. திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலுள்ள 25 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,500 மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்புப் பெற இம்முகாமில் பங்கேற்றனர். இதில், சனிக்கிழமை 155 பேரும், ஞாயிற்றுக்கிழமை 70 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. தவிர, 30 பேர் நேர்காணலுக்காக நிறுவனங்களுக்கு நேரடியாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

0 comments: