Monday, January 05, 2015

On Monday, January 05, 2015 by Unknown in ,    
மிலாது நபி நாளில் செயல்பட்ட, பெருமாநல்லூர் டாஸ்மாக் பாரில் போலீஸார் அதிரடி சோதனையிட்டு 1,647 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, 5 ஊழியர்களை கைது செய்தனர்.
மிலாது நபியையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெருமநல்லூர் நான்கு சாலை சந்திப்பு, குன்னத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை(எண்.2313) பாரில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் உத்தரவின் போõல், அவிநாசி துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் விஜயநாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள்
ஞானரவி, தங்கவேல், சிவகாமிராணி (மது விலக்கு), உதவி ஆய்வாளர் ரங்கநாதன்,
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த டாஸ்மாக் கடை பாரில் அதிரடி சோதனையிட்டனர்.
அங்கு, வைக்கப்பட்டிருந்த 1,647 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விடுமுறை தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்ததாக, பார் ஊழியர்களான சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் குமார் (24), சரவணன் (24), அஜித் (23), சிவராஜ் (26), பாலா (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, டாஸ்மாக் பார் உரிமையாளர் மணிகண்டன், பணியாளர் சுப்பிரமணி, பொறுப்பாளர் கண்ணப்பன் ஆகியோரை அவிநாசி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

0 comments: