Wednesday, January 14, 2015

On Wednesday, January 14, 2015 by farook press in ,    
திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து  நடத்திய  26வது சாலை பாதுகாப்பு வார விழா  பழைய பஸ் நிலையத்தில் 2வது நாளான இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, மாவட்ட செய்தி மக்கள் தொடபு துறை மூலம் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை  விளக்க மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியினை பார்வையிடு பேசினார். பின்னர் பேருந்துகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஓட்டினார்.
இந்த நிகச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தங்கினார். எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர்  எம்.சண்முகம், மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், வீரபாண்டி வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தலைவர் மார்க்கெட் நா.சக்திவேல்,வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் ( வடக்கு), பால்ராஜ் (தெற்கு), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், அய்யாசாமி, கவுன்சிலர்கள்  சண்முகசுந்தரம், கலைமகள் கோபால்சாமி மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், லோகநாதன் மற்றும் சுபாஷ், சத்துருக்கன், சக்திவேல், செந்தில்குமார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



0 comments: