Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
தாராபுரம் அருகே அலங்கியத்தில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் கே.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். அலங்கியம் ஊராட்சித் தலைவர் பாஸ்கர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். மருத்துவர் தேன்மொழி தலைமையிலான குழுவினர், முகாமில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இதுதவிர முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக ரத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

0 comments: