Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
காசோலை மோசடி வழக்கு தொடர்பாக தாராபுரம் நகராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜ், திருப்பூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
தாராபுரம் நகராட்சித் துணைத் தலைவரான கோவிந்தராஜ், தனது கிரஷர் தொழிலுக்கு தேவையான இயந்திரம் வாங்க கடந்த 2008-ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள நிதிநிறுவனத்தில் ரூ.50 லட்சம் கடன் வாங்கியிருந்ததாராம். அவர், கடனைத் திரும்பச் செலுத்தும் பொருட்டு, காசோலையை அந்நிறுவனத்திற்கு அளித்திருந்தாராம்.
இந்நிலையில், கோவிந்தராஜின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பியதையடுத்து, அந்த நிதிநிறுவனம் சார்பில் திருப்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு கோவிந்தராஜ் ஆஜராகாமல் இருந்ததையடுத்து, அவருக்கு பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிந்தராஜ் புதன்கிழமை திருப்பூர் நீதித் துறை நடுவர் (எண்.1) ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

0 comments: