Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேருந்துப் பயணிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஜமீன் கிருஷ்ணசாமி போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்திலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக அளித்த வாக்குறுதிப்படி முதியோருக்கான பேருந்துக் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: