Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களது கோரிக்கைகளை  எழுத்து மூலம் தருமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்கின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நாங்கள் இருந்தால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. அதே போல் காலையில் நடத்திய கணக்கு பாடத்திற்கு மாலையிலேயே தேர்வு வைக்கின்றனர். இதில் தேர்ச்சி அடையவில்லை  என்றால் வருகை பதிவேட்டில், வருகையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதன் மூலம் 13 நாள்களுக்கு மேல் வருகைபதிவு இல்லாமல் போனால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள் என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
 இதையடுத்து கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் கணக்கு பிரிவில் 116 பேர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொடுத்து திங்கட்கிழமை தேர்வு வைத்தோம். இதில் 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி பெறாத 57 மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பி வைத்தோம். அவர்கள் தவறான கருத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர் என்றார்.
 இதையடுத்து கோட்டாட்சியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.

0 comments: