Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by Unknown in ,    
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரலாறு காணாத அளவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



இஸ்லாமிய தீவிரவாதிகளால் 17 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பேரணியை ஒட்டியே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய பேரணியில் பத்துலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பேரணியில் நாற்பதுக்கும் அதிகமான நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சாமின் நெதன்யாஹூ ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் காவல்துறையினரும் இன்றைய பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கட்டிடங்களின் மேலே சிறப்பு பாதுகாப்புப்படையினர் கண்காணிப்பு பணி செய்வார்கள்.

சார்லி எப்தோ என்கிற கேலிச்சித்திர சஞ்சிகையின் பணியாளர்கள் மீது புதன்கிழமை நடந்த தாக்குதலில் ஆரம்பித்த இந்த வன்முறைகள், வெள்ளிக்கிழமையன்று பாரிஸ் நகருக்கு வெளியே இருந்த அச்சகம் மற்றும் யூதர்களின் சிறப்பங்காடியில் நடந்த முற்றுகையை பிரஞ்சு பாதுகாப்புப்படையினர் முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிவடைந்தன.

0 comments: