Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by Unknown in ,    
கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுவிட்டதாக இந்தோனேஷியா மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்தோனேஷியா நாட்டின் சுரபவாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர் ஆசியா விமானம், ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தெரியவந்தது.
 
விபத்துக்குள்ளானவர்களில் 40 க்கும் மேற்பட்டோர்களின் சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மேலும், விமானத்தின் சிதைந்த பாகங்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் அந்த விமானத்தின் வால்பகுதி ஜாவா கடலுக்கு அடியில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வால்பகுதியை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கிரேன் உதவியுடன் கடலில் இருந்து மீட்கப்பட்டது.
 
ஆனால் வால் பகுதியில் உள்ள கருப்புப் பெட்டி கிடைத்தால்தான் விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதால் கருப்புப் பெட்டியை கண்டறியும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
 
இந்நிலையில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள் சிக்கிய ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்தோனேஷியா மீட்பு குழு தகவல் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து, மீட்புக்குழு தலைமை அதிகாரி, ’நாங்கள் விமான தகவல் பதிவு செய்யும் கருவி என அழைக்கப்படும் கருப்பு பெட்டியைக் கடலில் இருந்து மீட்பதில் வெற்றி பெற்றுவிட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments: