Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
ஜெர்மானிய மக்கள் இஸ்லாத்துக்கு எதிரான பேரணிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டின் அதிபர் ஏங்கலா மெர்கெல் அம்மையார் கேட்டுள்ளார்.
 
இஸ்லாமிய எதிர்ப்புப் பேரணிகளை புறக்கணிக்க ஜெர்மனிய அதிபர் கோரிக்கை
ஜெர்மனியின் டிரஸ்டென் நகரில் சமீபத்தில் நடந்த இஸ்லாமிய எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு அதிகம் காணப்பட்ட நிலையில், தன்னுடைய புத்தாண்டு உரையில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
 
டிரஸ்டன் பேரணியில் சுமார் 17,000 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
 
இஸ்லாமிய எதிர்ப்புப் பேரணிகள், வேறு மதத்தையும், வேறு தோல் நிறத்தையும் கொண்டிருப்போருக்கும் எதிராகக் காட்டப்படும் காழ்ப்புணர்ச்சி என்று அவர் வர்ணித்துள்ளார்.
 
பெகிடா என்ற பெயரில் நடத்தப்படும், இஸ்லாமிய எதிர்புப் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள், இந்தப் பேரணிகள் இஸ்லாத்துக்கோ, குடியேறிகளுக்கு எதிரானதல்ல என்றும் பயங்கரவாதத்தைத்தான் தாம் எதிர்ப்பதாகவும் கூறுகின்றனர்.
 
தஞ்சம் கோருபவர்களை ஜெர்மன் வரவேற்கும் என்று ஏங்கலா மெர்கெல் கூறியுள்ளார். இந்த ஆண்டு 2 லட்சம் பேரின் தஞ்சக் கோரிக்கைகளை ஜெர்மனி ஏற்றுள்ளது. மற்ற எந்த நாட்டையும் விட இது அதிகம் என்றும் மெர்கெல் அம்மையார் கூறியுள்ளார்.

0 comments: